Thursday, March 03, 2011

கனவில் தொலைத்த புத்தகம்


து மற்றுமோர் கனவே 
புத்தகங்கள் பல புடைசூழ
ஒரு புத்தகம் என் கையில் 
புரட்டிப்பார்த்து ரசிக்கையில் 
இடறி விழுந்த அது 
மேகத்தினின்று உதிர்ந்த 
மழைத்துளி போல் 
காற்றில் தொலைய 
பதைபதைக்கிறது மனம் 

ன் நிலை கண்டு 
தோழர்கள் சிலரும் 
உதவ முனைந்து தேட 
காலமும் தேடலும் இலக்கற்று நீள
புத்தகத்தை பார்த்தபாடில்லை 
என் துயரம் ஓய்ந்தபாடில்லை



தொலைந்துபோகும் பொருட்களின் 
முடிவற்ற பாதாளத்தில்
எல்லையற்று சூழ்ந்திருக்கும் 
புத்தகங்கள் ஒவ்வொன்றும் 
சளைக்காமல் என்னிடம் நீட்டப்பட
"இதுவல்ல அது" என 
எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றத்துக்கும்  
உள்ள இடைவெளியில் 
பலமுறை சொல்லப்படுகிறது 

ட்டென்று கனவில் நினைவை 
காண்பது போல 
வீட்டு அலமாரியில் அடுக்கியிருக்கும்
ஆசையாய் வாங்கிய
படித்துமுடிக்கப்படாத 
வயோதிகப் புத்தகங்கள் 
பலவும் நினைவில் அலைய  
மற்றுமோர் புத்தகத்தை 
நீட்டுகிறான் தோழன்

ங்கக் கோடரியையும் 
வெள்ளிக் கோடரியையும் 
தேவதையிடம் நிராகரித்த 
நேர்மையான விறகுவெட்டியைப்போல் 
"இதுவல்ல அது" என 
மீண்டும் வாய் சொல்ல 
தாளாத துயரம்
கண்களை நிரப்பி
கன்னத்தில் வழிய
கனவில் நான்
நல்ல வாசகனாகவே இருந்திருக்கிறேன்! 



No comments:

Post a Comment